சென்னை – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி சென்னை வர உள்ளார்.

குறைந்த கட்டணத்தில் அதிவிரைவில் செல்லக்கூடிய ‘கரீப்ரத்’ போன்ற சொகுசு ரயில் சேவையாக இல்லாமல் அதிக கட்டணத்தில் குறுகிய தூரம் மட்டுமே செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சேவை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே சென்னையில் இருந்து நெல்லை வரையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் சேவையை துவக்கி வைக்க மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.