டெல்லி : ரூ. 550 கோடி மதிப்பீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டுப்பட்டு வந்த புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வந்த பாம்பன் புதிய பாலம் வரும் 6ந்தேதி (ஏப்ரல், 2025) அன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாம்பன் புதிய பாலம் வருகின்றன ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி , பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த தூக்கு பாலம் கடந்த 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. கடலுக்கு நடுவில் உள்ள இந்த பாலத்தில் 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த பாலம் கட்டி 110 ஆண்டுகள் ஆனதால் கடல் அரிப்பின் காரணமாக உறுதித்தன்மை குறைந்தது. இதனால் தூக்குப்பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. எனவே, பயணிகள் பாதுகாப்பு கருதி அந்த பாலத்தின் வழியாக செல்ல கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், அந்த பாலத்திலும் ரயில் சேவை 2022 டிசம்பர் 22-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் புதிய பாலம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. அதன்படி, பாம்பன் நடுக்கடலில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
தொடக்க்ததில் ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு ஆய்வு பணிகள் முடிவடைந்து பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது ரூ.550 கோடி செலவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பாலமானது ஏற்கனவே இருந்த தூக்கு பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. கடல் நீரால் அரிப்பு ஏற்படாத வகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், ‘சிலீப்பர்’ கட்டைகளும் பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்படுகிறது. இதுவும் துருப்பிடிக்காத வகையில் இருக்கும்.
இந்த புதிய பாலத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளில் புதிய பாலம் கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி புதிய பாலம் கட்டும்பணி கடந்த 4 ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடல் நீரால் அரிப்பு ஏற்படாத வகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதுடன், ‘சிலீப்பர்’ கட்டைகளும் கடல்நீரால் பாதிக்கப்படாதவாறு, பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாலத்தில், கப்பல்கள் செல்லும்போது , அதற்கு வழிவிடும் வகையில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெற்றுள்ளது. இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பாலத்தினால், ஒரே நேரத்தில் இந்த பகுதியில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும். இநத் செங்குத்தான தூக்குபாலம், மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதன் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராமேஷ்வரம் வருகை தந்துள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் ரயில்வே துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையம், நிகழ்ச்சி நடைபெற உள்ள ஆலயம் பகுதி உள்ளிட்டவற்ற பார்வையிட உள்ளார்.
இதையடுத்து பாம்பன் சாலை பாலத்தில் மேடைகள் அமைக்கப்பட்டு பிரதமர் வருகை தந்து திறந்து வைப்பது போன்று டெமோக்களும் நடத்தப்பட உள்ளது.