லக்னோ: “பிரதமர் கடலுக்கு அடியில் சென்றார்.. ஆகாயத்தில் பறந்தார்.. ஆனால், இரண்டுக்கும் இடையில் இருக்கும் மக்களை மறந்துவிட்டார் என உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.
மேலும், ராகுலிடம் அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கட்சி தலைமை என்ன உத்தரவிடுகிறதோ அதன்படி நடப்பேன். எங்கள் கட்சியில், வேட்பாளர்கள் தேர்வு எல்லாம் தலைமை தான் முடிவு செய்யும்” என ராகுல் பதிலளித்தார்.
ராகுல்காந்தி தற்போது கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். வரும் தேர்தலில் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து, இண்டியா கூட்டணி சார்பில், கம்யூனிஸ்டு தலைவர் ராஜாவின் மனைவி ஆனிராஜா களமிறங்கி உள்ளார். அதுபோல பாஜக சார்பில், மாநில பாஜக தலைவர் போட்டியிடுகிறார். இதனால் அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி காசியாபாத்தில் காசியாபாத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
தற்போது நடைபெற உள்ள தேர்தல், சித்தாந்தங்களுக்கு இடையிலான தேர்தல். ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.,வும் இந்திய அரசியலமைப்பையும், ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயற்சித்து வருகிறது. மறுபுறம் இண்டியா கூட்டணியும், காங்கிரசும் அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுகிறது. இந்த தேர்தலில் 2, 3 பெரிய பிரச்னைகள் இருக்கின்றன. அதில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரியது, அடுத்ததாக பணவீக்கம் உள்ளது.
ஆனால் பா.ஜ., மக்களை திசைத்திருப்புகிறது. பிரதமரோ, பா.ஜ.,வினரோ பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை. தேர்தல் பத்திரங்கள் திட்டம் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகவும், தூய்மையான அரசியலுக்காக கொண்டுவரப்பட்டதாகவும் பிரதமர் கூறுகிறார். அப்படியெனில், உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும்? மேலும் அது வெளிப்படையாக இருக்கிறது என்றால், எதற்காக நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை மறைக்க வேண்டும்? எதற்காக அவர்கள் அளித்த பணம் பற்றிய விவரங்களையும் மறைக்க வேண்டும்? இது உலகின் மிகப்பெரிய கொள்ளையடிக்கும் திட்டம் என விமர்சனம் செய்தார்.
பாஜகவின் கொள்யைடிக்கும் திட்டத்தை அனைத்து தொழிலதிபர்களும் தற்போது புரிந்துக்கொண்டுள்ளனர். பிரதமர் ஊழலின் தலைவன் என்பதை ஒட்டுமொத்த தேசத்திற்கும் தெரியும்.
கடந்த 10 ஆண்டுகளில், பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி மற்றும் அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களை ஆதரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் முறையை பிரதமர் மோடி குறைத்துள்ளார்.
“பிரதமர் கடலுக்கு அடியில் சென்றார்.. ஆகாயத்தில் பறந்தார்.. ஆனால், இரண்டுக்கும் இடையில் இருக்கும் மக்களை மறந்துவிட்டார்
எங்களின் முதல் பணி வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்துவது, அதற்காக நாங்கள் 23 யோசனைகளை வழங்கியுள்ளோம்.
சில நாட்களுக்கு முன்புவரை பா.ஜ., 180 இடங்களை வெல்லும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது 150 இடங்களை கைப்பற்றும் என நினைக்கிறேன். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பெறக்கூடிய தகவல்கள்படி நாங்கள் வளர்ந்து வருகிறோம். உத்தரபிரதேசத்தில் நாங்கள் மிகவும் வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம்; சிறப்பாக செயல்படுவோம் என்றார்.
‘ஏக் ஜாட்கே சே ஹம் ஹிந்துஸ்தான் சே கரீபி கோ மிதா டெங்கே’ அறிக்கை குறித்து கூறிய , காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, “வேலைநிறுத்தம் (ஜட்கா) மூலம் வறுமையை அகற்றுவோம் என யாரும் கூறவில்லை…
பிரதமர் மோடி, 22 பேர் மீது மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார். மற்றும் இன்றைய உண்மை என்னவென்றால், நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் உள்ள சொத்துக்கு இணையான சொத்து 22 பேரிடம் உள்ளது…
புரட்சிகர பணி, ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஏழை பெண்களுக்கு ரூ.1 லட்சம், இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி சட்டம், தொழிற்பயிற்சி உரிமை, ரூ.1 லட்சம் அவர்களின் வங்கிக் கணக்குகளில், பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்கு எதையும் வழங்கவில்லை, எனவே நாங்கள் அதைச் செய்யப் போகிறோம் என்றார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள், ராகுலிடம் அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய ராகுல், இது பாஜகவின் கேள்வியாக உள்ளது என்றவர், கட்சி ‘தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன்’ என பதிலளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “பிடிஏ’ என்டிஏவை தோற்கடிக்கப் போகிறது. ‘பரிவார்வாத்’வைப் பொறுத்தவரை, ‘பரிவார் வாலே’க்கு டிக்கெட் கொடுக்கவோ, ‘பரிவாரின் ஓட்டுக்களைப் பெறவோ கூடாது’ என, பா.ஜ., தீர்மானம் எடுக்க வேண்டும். அவர்களால் (பாஜக) இந்தியக் கூட்டணியின் பெயரைக்கூட சரியாக எடுத்துக்கொள்ள முடியாது… 2014ல் வந்தவர்கள் 2024ல் இல்லாமல் போய்விடுவார்கள் என்றார்.