மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஜூலை 27ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில், ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த ஆண்டு ஆடித் திருவாதிரை நட்சத்திர நாளான ஜூலை 27ம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழா நடைபெற உள்ள அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதை அடுத்து அவர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிகிறது.
பிரதமர் மோடி ஜூலை 2 முதல் 9 வரை கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.