டெல்லி:
பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த பணத்தை கொரோனா தொற்று உதவிக்காக செலவழித்ததை பாராட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் அகில இந்திய வானொலியில் மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இது அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் நாட்டு நடப்புகள் குறித்து பேசுவதும் மக்களுக்கு சில அறிவுரைகளையும் கூறி வருகிறார்.
இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றிய மன் கீ பாத் நிகழ்ச்சியில், மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் மோகன் என்பவர், தனது மகள் படிப்பிற்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஊரடங்கு காலத்தில், வாழ்வாதாரம் பாதி்க்கப்பட்ட ஏழைகளுக்கு அளித்து உதவி செங்ள்ளார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிட்ட அவருக்கு பாராட்டுக்கள் என வாழ்த்தியுள்ளார்.
பிரதமரின் பாராட்டு மதுரை மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோடி ஏற்கனவே கடந்த ஆண்டு, வடசென்னையின் பிரபல மருத்துவரான 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனை புழந்து பேசினார். அப்போது , “ஒருவருடைய சொந்த வாழ்க்கையாகினும் சரி அல்லது நாட்டின் வாழ்க்கையிலும் கடந்து வந்த பாதையை நாம் பார்ப்பது அவசியம். அதேபோல எதிர்காலத்தையும் பற்றி நமக்குப் பார்வை இருக்க வேண்டும் என்று அவரை குறிப்பிட்டு வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.