ஒட்டன்சத்திரம்: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பிரதமர் மோடிதான் காரணம் என முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில்சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட கட்சி நிர்வாககிள் பலர் கலந்துகொண்டனர். சிறிது நேரம் மட்டுமே நடைபெற்ற இந்த போராட்டம் கடும் வெயில் காரணமாக பிசுபிசுத்து போனது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசனிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர், உக்ரைனில் போர் நடந்து வருவதால் விலை கூடியிருக்கிறது என்றவர், இந்த விலை உயர்வுக்கு  பிரதமர் மோடிதான் காரணம் என்றும் கூறினார்.

திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சால், கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]