டெல்லி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தி தீபோத்சவ (ஆரத்தி) விழாவில் பங்கேற்க அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி. தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், தீபாவளியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் ராம் ஜி கி பைடியில் நடைபெறும் தீபத்ஸவத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 6வது ஆண்டாக தீபோத்சவ விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதன்முறையாக, பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இந்த விழாவின்போது, தபூலாவின் நிதியுதவியில் 15 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்படும். ஐந்து அனிமேட்டட் டேப்லோ மற்றும் பதினொரு ராம்லீலா டேப்லோ பல்வேறு மாநிலங்களில் இருந்து வெவ்வேறு நடன வடிவங்களுடன் தீபோத்சவின் போது வைக்கப்படும். இதை பிரதமர் கண்டுகளிப்பதடன், அங்கு ஷரயு நதிக்கரையில் நடைபெற உள்ள, இசை லேசர் ஷோவுடன் 3-டி ஹாலோகிராபிக் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
அன்று மாலை 6.30 மணியளவில் சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சியை பிரதமர் நேரில் காண்பார் என்றும், அதைத் தொடர்ந்து பிரம்மாண்ட தீப உற்சவத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.