டெல்லி: தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் டு அப்பர் குருபூஜை சித்திரை தேர் திருவிழா தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 3மணி அளவில் தேர் சென்றுகொண்டிருந்தபோது, சாலை திருப்பத்தில் தேரை பக்தர்கள் திருப்பும்போது, அருகே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால், தேரில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் தேர் தீப்பிடித்ததுடன், தேரில் பாயந்த மின்சாரம் தாக்கியதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
இதையடுத்து தஞ்சை அருகில் களிமேட்டில் தேர் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக விபத்துக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளதுடன், சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களுக்கு ஆளுதல் கூற இன்று தஞ்சாவூர் செல்கிறார்.
இதற்கிடையில், இதுகுறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளடுன், தேர்பவனி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.