சென்னை:

மிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள நேற்று தமிழகம் வந்து சென்ற பிரதமர் மோடி, மீண்டும் பிப்ரவரி மாதம் தமிழகம் வருகிறார். இந்த தகவலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

பல ஆண்டு கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தின் மதுரை மாவட்டம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மதுரை வந்த மோடி, பின்னர் மாலை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார் என்று தெரிவித்து உள்ளார்.

குமாரி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் நடைபெற்றுள்ள மக்கள் நலப்பணிகளை தொடங்கி வைக்கவும், ரூ 40 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் மேம்பாலங்கள் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிப்.19-ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, அன்று  கன்னியாகுமரியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திலும் மோடி உரையாற்றுகிறார் என்று தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம்  மாதம் ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது, அப்போது  நிவாரண உதவிகள் வழங்க பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தது குறிப்பிடத்தக்கது.