சென்னை: திருச்செந்தூர் உள்பட 9 இடங்களில் 197 மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து  தொடங்கி வைத்தார்.

இந்து அறநிலையத்துறையின் கீழ் சென்னை, தி,மலை, மதுரை, திருச்செந்தூர், பழனி, ஸ்ரீரங்கம் கோவில்கள் உள்பட  9 இடங்களில் அர்ச்சகர்களுக்கு பயிற்சி வகுப்பு கள் நடத்தப்படுகிறது. இங்கு சேர 197 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர்களின்  அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலியில் தொடங்கிவைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் மேம்படுத்தப் பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் 151 மாணவர்களுடனும்,  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உட்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.