நெட்டிசன்:

Dr. V. Hariharan, MBBS, MD., முகநூல் பதிவு…

Disclaimer: கீழே சொல்லப்பட்டது அனைத்தும் என் சொந்த சிந்தனை சார்ந்ததே. உண்மைத் தன்மைக்கு நான் பொறுப்பல்ல.

ஒரு தடுப்பூசி கண்டுபிடித்து மார்க்கெட்டுக்கு வர 1.5 வருடம் ஆகும். வந்த பின்னர் நாம் அனைவரும் போட்டுக் கொண்ட பின் Herd immunity வந்து விடும். பின்னர் கரோனா என்பது போலியோ போல அங்கொன்று இங்கொன்று என ஆகி, சமூக அச்சுறுத்தல் சுத்தமாக விலகி விடும். அதுவரை என்ன செய்வது?

20-40வயதுக்காரர்களை கரோனா அதிகம் தாக்குவது, அவர்கள் அதிகம் ஊர் சுற்றுவதாலேயே என எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக ரிஸ்க் உள்ளவர் முதியோர். அவர்களுக்கு சுகர், இதய வியாதி ஏனைய பலப் பிரச்சினைகள் இருக்கும். அதனால் அவர்களுக்கு கரோனா வந்தால் அதனால் ஏற்படும் complications பெரிதாக இருக்கும்.

65 வயதிற்கு மேல் வீட்டில் இருக்கும் சொந்தங்கள் அருகில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். நம்மிடம் இருந்து அவர்களுக்கு வந்து விடலாகா. அவர்களை தொட வேண்டாம், அவர்கள் பொருட்களை தொட வேண்டாம். இருவரும் பேசும் போது மாஸ்க் அணிவது அவசியம். ஆறடி தள்ளி நின்றே பேசுவது அவர்களுக்கு நல்லது.

இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு விளையாட்டு போட்டிகளை நேரலையாக மட்டுமே பார்க்க வேண்டும். பொதுமக்கள் ஸ்டேடியம் வர அனுமதி இருக்கக் கூடாது. அதே போலத் தான் இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், மாநாடுகள் தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள் அனைத்துமே.

வீட்டின் வெளியே அடுத்த 1.5 வருடங்களுக்கு Hand sanitizer வைக்கவும். உள்ளே வரும் அனைவரும் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும்.

திருமணங்கள்- குறைந்த அளவு அழைப்பது நல்லது. கரோனாவை காரணம் காட்டி எளிமையாக, கம்மி செலவில் திருமணம் நடத்தலாம்.

வங்கி கையிருப்பு- வேலைக்கு செல்லும் குடும்பத்தலைவர் சம்பளத்திலும் மூன்று மாத தொகை வங்கியில் அவசர தேவைக்கு இருக்க வேண்டும். (எ. கா சம்பளம் 30,000 என்றால், பாங்கில் ஒரு லட்சம் இருக்க வேண்டும்). கையில் பணமாக ஒரு வார சம்பளம் எப்போதும் இருக்க வேண்டும். ரொம்ப யோசித்து வீடு வாங்குங்கள். நகை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்.

கோவில்/தேவாலய/மசூதி விழாக்களை ஒன்றரை வருடங்களுக்கு மூட்டை கட்டவும்.

வெள்ளிக்கிழமை நமாஸ், ஞாயிறு ஜெபக்கூட்டங்கள்-ஆறடி சமூக இடைவெளி விட்டே உட்கார வேண்டும். இருக்கை தீர்ந்து விட்டால், அனுமதி இல்லை. அனைத்து கோவில்களிலும் கண்டிப்பாக ஆறடி இடைவெளி இருக்குமாறு Swivel gateகளை வரிசையில் வைக்க வேண்டும். அல்லது எல்லா கோவில்களும் முன்பதிவின் படி மட்டுமே பக்தர்களை உள்ளே விட வேண்டும். டிரஸ் கோட் போல மாஸ்க் இல்லாமல் வழிபாட்டு தளங்களில் அனுமதி வழங்கப்படக் கூடாது.

கூட்டம் வழியும் ஜவுளிக் கடைகள்-டோக்கன் சிஸ்டம் வேண்டும். ஆன்லைனில் முந்தைய நாளே டோக்கன் வாங்கி விட வேண்டும். இத்தனை பெரிய கடைக்கு இத்தனை பேரை அனுமதிக்கலாம் என அரசு நெறிமுறைகளை வழங்க வேண்டும்.

தியேட்டர். எல்லாமே முன் பதிவாகத் தான் இருக்க வேண்டும். ஒன்றாக புக் செய்பவர்கள் அருகருகே உட்காரலாம். இன்னொருவர் புக் செய்தால், மூன்று சீட்கள் தள்ளி தான் இருக்கை தர வேண்டும். அந்த மூன்று சீட்களும் காலியாக இருக்க வேண்டும்.

மால்-வாசலில் People counter machine இருக்க வேண்டும். ஓரளவிற்கு மேல் ஆட்களை உள்ளே விடக் கூடாது.

ரயில் பயணம்- 90 பேர் உட்காரும் இடத்தில் 30பேர் மட்டுமே அனுமதிக்கப் பட வேண்டும். ஆனால் டவுன் பஸ், மெட்ரோ மற்றும் லோக்கல் டிரெயினில் இதெல்லாம் செய்ய முடியாது, நாம் தான் மாஸ்க் போட்டுக் கொண்டு, வெளியேறும் போது hand sanitizer பயன் படுத்த வேண்டும். பயணம் முடிந்த பின், பஸ், ஆட்டோ, டாக்சி, ரயில் எல்லாமே கிருமிநாசினி ஸ்ப்ரே அடிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகள்- ஒன்றுமே செய்ய முடியாது. ஆரம்பித்து தான் ஆக வேண்டும். அனைவரும் கர்சீப், hand sanitizer எடுத்து வர வேண்டும். சளி, இருமல் காய்ச்சல் இருந்தால், லீவ் எடுத்த பின், கண்டிப்பாக கரோனா டெஸ்ட் ரிப்போர்ட் இருந்தால் தான் அனுமதிக்க வேண்டும்.

அலுவலகம், தொழிற்சாலை- வழக்கம் போல செயல்படலாம். சளி, இருமல், காய்ச்சலுடன் யார் இருந்தாலும், மேலாளருக்கு போட்டுக் கொடுத்து, சம்பளத்துடன் கூடிய லீவ் மற்றும் கரோனா டெஸ்ட் செய்த பின்பே மறுபடி அனுமதிக்க வேண்டும். தினமும் கிருமிநாசினி போட்டு துடைக்க மற்றும் ப்ளீச்சீங் பவுடர் கலந்த நீர் கொண்டு Surfacesஐ ஸ்பிரே செய்யலாம்.

லாட்ஜில் தங்கல்- பெட்ஷீட், போர்வை, தலையணை உறை கொண்டு போய் விடவும். Dettol disinfectant spray கொண்டு படுக்கையை ஸ்ப்ரே அடிக்கலாம். லாட்ஜில் காலையில் குளித்த பின் கழட்டிய துணியை தனிப் பை கொண்டு, வீட்டிற்கு கொண்டு வந்து டெட்டாலில் ஊறப் போட்டு துவைக்கலாம்.

இதற்கெல்லாம் Special police force உருவாக்கி புதியதாக ஆட்களை வேலைக்கமர்த்த வேண்டும். இந்த ரூல்களை மதிக்காத நிறுவனம் மற்றும் பொதுஜனம் அவர்களிடம் இருந்து மினிமம் ஐயாயிரம் என அபராதம் விதிக்க வேண்டும் (அதை EMIஆக கட்ட வாய்ப்பு தர வேண்டும்).

அனைத்து மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பணியில் N95மாஸ்க் அணிய வேண்டும்.