டில்லி,

கில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இது டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

வட மாநிலங்களில் பாரதியஜனதா செல்வாக்கு உயர்ந்து வருகின்ற நிலையில், நிதிஷ்குமார் சோனியாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது,பாரதியஜனதாவுக்கு  எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டும்தான் பாஜகவை ஆட்சிப்பீடத்தில் இருந்து அகற்ற முடியும், அதற்காக மாற்று கருத்துடைய கட்சிகள் இணைந்து செயல்பட்டால்தான் எதிர்க்க முடியும் என்று அப்போது பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், வர இருக்கின்றன  குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தும்  சோனியா காந்தியிடன் பேசியதாகவும், அதுகுறித்து  சோனியா நல்ல முடிவு எடுக்க  வேண்டும் என்றும் நிதிஷ்குமார் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து,  இடதுசாரிக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தி வருவதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.