டில்லி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தி பேசும் மக்கள் மற்ற பிராந்திய மொழிகளுக்கு மரியாதை அளித்தால் தான் இந்தி மொழி வளரும் என கூறி உள்ளார்.
நேற்று டில்லியின் இந்தி நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் ஜனாதிபதி ராம்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜ்ஜு மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். இதில் ஜனாதிபதி ராம் கோவிந்த் உரையாற்றினார்.
அந்த உரையில் தெரிவித்ததாவது :
”இந்தி பேசும் மக்கள் மற்ற் மொழிகளை மதிக்க வேண்டும். இந்தி மொழி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் இன்னும் நாட்டின் பல இடங்களில் அதற்கு எதிர்ப்பு உள்ளது. தற்போது பெங்களூரு மெட்ரோவில் இந்தி போர்டுகளுக்கு எதிர்ப்பு எழுந்ததும், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்ததும் இந்தி மொழி அவர்கள் மேல் திணிக்கப்படுகிறது என்னும் எண்ணம் தான் காரணமாகும்.
நாம் (இந்தி பேசும் மக்கள்) எப்படி மற்றவர்கள் நமது மொழியை மற்றவர்கள் பேச வேண்டும் என விரும்புகிறோமோ அது போல் இந்தி பேசாத மக்களும் அவர்கள் மொழியை நாம் பேச வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதை மனதில் கொண்டு தமிழில் வணக்கம் என சொல்வதும் சிக்கியர்களிடம் சத் ஸ்ரீ அகால் என்பதும் அவர்களுக்கு மகிழ்வைத் தரும். தெலுங்கு பேசும் மக்களிடம் அவர்கள் பெயருடன் காரு என சேர்த்துச் சொல்வது மரியாதையான வார்த்தை ஆகும். மற்றவர் மொழிகளை மதித்தால் தான் இந்தி மொழி வளரும் ” என்று கூறினார்.