சென்னை:
வெளியூரைச் சேர்ந்த ஆயிரம் ரவுடிகள், சென்னையில் உள்ள விடுதிகள் பலவற்றில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை வைத்து கலவரம் செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் வந்த தகவலை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சென்னையில் உள்ள விடுதிகளில் அந்தந்த பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்ரகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதேபோல, ஆளுநர் மாளிகையிலும் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுளளது.
தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் நேற்று ஆளுநரை சந்தித்தனர். அப்போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து நேற்றே குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று யூகச்செய்திகள் உலவின. இந்த நிலையில், இன்று காவல்துறையின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இன்று இரவு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.