டெல்லி: குடியரசு தின விழாவையொட்டி குடியரசுத் தலைவர் பதக்கங்களை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏடிஜிபி வெங்கட்ராமன், சிவன்அருள் உள்பட 17 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும 939 காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 26ந்தேதி அன்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்தியஅரசு சார்பில், காவல்துறையின் சிறப்பான பணி மற்றும் வீரதீரச் செயலுக்கான குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான சிறப்பு பதக்கம் 88 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதில், சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கம் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த , மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், ஐஜி பிரதீப் குமார் மற்றும் ஏஐஜி சரவணன், சிவன் அருள் உள்பட உள்பட 17 காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதுபோல தமிழ்நாட்டில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.