ஆந்திரா: காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச அதிகாரம் உள்ளவர் தலைவர் கார்கே அவர்தான் கட்சியில் எனக்கு என்ன பகுதி என்பதை தெரிவிக்க வேண்டும் என ஆந்திர மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும்  ராகுல்காந்தி கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார்.  இந்த யாத்திரையானது கேரள மற்றும் கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து, தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இன்று 42வது நாளாக ஆந்திராவில் அதோனி பகுதியில் பாதயத்திரை மேற்கொண்டபோது, அந்த பகுதியில் உள்ள கங்கை பவானி கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து விஜய நகரம் மாவட்டத்தில் சாகி கிராமம் முதல் பனவாசி கிராமம் வரை ரா தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இன்றைய பயணத்தின்போது, ஆந்திர மாநிலம் அடோனி பகுதியில் மதிய இடைவேளையின்போது,  செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி,  கட்சியில்  “காங்கிரஸ் தலைவரின் பங்கு குறித்து என்னால் கருத்து கூற முடியாது, அது குறித்து கார்கே (கட்சியின் தலைவர் வேட்பாளர்) கருத்து தெரிவிக்க வேண்டும். கட்சியில் எனது பங்கு என்ன என்பதை தலைவர் தான் முடிவு செய்வார். காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். அவரே அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என்றார்.

மேலும் ஆந்திரா – தெலுங்கானா பொறுத்த வரையில், ஆந்திரப் பிரதேச மக்களுக்கு மோடி அரசு சில உறுதிமொழிகளை அளித்துள்ளது. அந்த அடிப்படைக் கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டில் தேர்தல் நடத்தும் மற்றும் தேர்தல் ஆணையத்தை வைத்திருக்கும் ஒரே அரசியல் கட்சி நாங்கள்தான் என்றார்.

7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி! தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…