டில்லி

பாஜக அரசு அறிமுகம் செய்த 3 வேளாண் சட்ட ரத்து மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.  தலைநகர் டில்லியில்  பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தியும் முடிவுக்கு வராமல் மத்திய பாஜக அரசு பிடிவாதம் காட்டி வந்தது.

பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுத்து வந்தது.  விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு இறுதியாக மத்திய அரசு அடி பணிந்தது.   பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மசோதா இயற்றப்பட்டது.

இந்த வேளான் சட்ட ரத்து மசோதாவுக்கு இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓப்புதல் அளித்துள்ளார்.   இந்த ஒப்புதலின் அடிப்படையில் 3 வேளான் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.   3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.