டெல்லி:

த்திய பாஜக அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயாரிப்பதற்கு பதிலாக,வேலையில்லாமல் இருப்பவர்களின் பட்டியலைத் தயாரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் யோசனை தெரிவித்து உள்ளார்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், மத்தியஅரசு அமல்படுத்தியுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

‘இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் பிரவு கடந்த 23ந்தேதி அன்று ,, தேசிய வேலையற்றோர் பதிவு (National Register of Unemployed – NRU) திட்டத்துக்கு ஆதரவு கோரி மிஸ்டு கால் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய்சிங்கும்,  தேசிய வேலையற்றோர் பதிவு (National Register of Unemployed – NRU) திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று மத்திய பாஜக அரசுக்கு ஆலோசனை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,   பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் எனது நேர்மறையான யோசனையை அளிக்கிறேன். மத்திய அரசு முடிவு செய்திருக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு அறிக்கையை தயாரிப்பதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக, தேசிய அளவில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இந்தியக் குடிமக்களின் பதிவேட்டைத் தயாரிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.