தனது சுயலாபத்துக்காக கேப்டனை பலிகடாவாக்கும் பிரேமலதா….! தேமுதிகவினர்- நெட்டிசன் குமுறல் – வைரல் வீடியோ

Must read

சென்னை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உட்காரகூட முடியாத நிலையில், அவரை தூக்கிவந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவரது மனைவி, பிரேமலதா தனது சுயலாபத்திற்காக கொடியேற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைலாகி வருகிறது. அதை காணும், தேமுதிக தொண்டர்களும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தேமுக தலைவராக விஜயகாந்த் ஆக்டிவாக இருந்த வரையில், அந்த கட்சிக்கு தனி வாக்குவங்கியே இருந்து வந்தது. ஆனால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதும், அவரது மனைவி மற்றும் மைத்துனர் என குடும்பத்தினர் கட்சி பொறுப்புக்குள் அடியெடுத்து வைத்ததும், தேமுதிகவின் வாக்கு வங்கிகள் சரியத்தொடங்கியது. இது ஏற்கனவே நடைபெற்று முடிந்த தேர்தல்களில் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா என்று கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில் விஜயகாந்த் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், அவரது காலில் சில விரல்கள் துண்டிக்கப்பட்டு, உயிர் பிழைத்தார். தற்போது உட்காரக்கூட முடியாமல், படுக்கையிலேயே இருந்து வருகிறார். ஆனால், அவரைக்கொண்டு பிரேமலதா சுதந்திர தின கொடியை ஏற்ற வைத்த கொடுமை, பார்ப்போரின் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது.

ஆகஸ்டு 15ந்தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தையட்டி, சென்னை கோயம்பேட்டில், உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேமுதிக அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றினார். இதுகுறித்து தேமுதிக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  தேமுதிக தலைமை கழகத்தில் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியினை விஜயகாந்த் ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியின்  கட்சிப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தலைமை நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலார்கள், மகளிர் அணியினர், பகுதி, வட்ட கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், கட்சி தொண்டர்களுக்கும், பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர். அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் என தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில், விஜயகாந்த் கொடியேற்றுவதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வேனில் அமர வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த், உட்காரகூட முடியாமல் சரிந்து விழும் நிலையிலும், அவரை தனது காலால் தாங்கி, அவரை நிமிர்த்தி பிடித்துக்கொண்டு, அவரது முகத்தில் கருப்பு கண்ணாடியை வலுக்கட்டாயக மாட்டி, அவரால் கொடிக்கயிரைக் கூட பிடிக்க முடியாத நிலையில், கொடிகம்பத்தின் கயிரை அவரருகே கொண்டுவந்து, மற்றொருவரைக் கொண்டு இழுத்து கொடி ஏற்றப்படுகிறது.

இந்த வீடியோவை காணும் தேமுக தொண்டர்கள், துடிதுடித்து போயுள்ளனர். சிங்கமாக கர்ஜித்த கேப்டனை, பிரேமலதா, தனது சுயலாபத்துக்காக பலி கடாவாக்கி, இன்றுசெல்லாக்காசாக்கி விட்டாரே என கதறுகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில், நெட்டிசன்கள், சமூக ஆர்வலர்கள், பிரேமலதா விஜயகாந்தின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

கேப்டனின் நிலையை காணும்போது நெஞ்சு பதறுகிறது, கேப்டன் அவர்களை அரசியலுக்காக சிரமப்படுத்தாமல் நிம்மதியாக விட்டுவிடுங்கள் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடல்நலமில்லாத நபரை ஏன் கொடியேற்ற அழைத்து வர வேண்டும் என்ற கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள், விஜயகாந்தின் தற்போதைய நிலைக்கு, பிரேமலதாவின் அரசியல் பேராசைதான் காரணம் என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.

More articles

Latest article