பிரிட்டனின் முதல் சீக்கிய பெண் எம் பி ப்ரீத் கவுர் கில்

ட்க்பாஸ்டன், பிரிட்டன்

எட்க்பாஸ்டன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பெண் எம் பி ப்ரீத் கவுர் கில், ப்ரிட்டனின் முதல் சீக்கிய பெண் எம் பி என்னும் சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனின் தேர்தல் முடிவுகள் நேற்றிரவு முதல் வெளியாகின.

இதில் எட்க்பாஸ்டன் தொகுதியில் ப்ரீத் கவுர் கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

சீக்கியப் பெண்ணான ப்ரீத் கில் எட்க்பாஸ்டனில் பிறந்து வளர்ந்தவர்.

இவரே பிரிட்டனின் முதல் சீக்கியப் பெண் எம். பி. என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு வயது 44.

இவரது தந்தை ஒரு பேருந்து ஓட்டுனர்.

இவர் லேபர் கட்சியை சேர்ந்தவர்.

இவர் 2012 டிசம்பர் முதல் கவுன்சிலராக இருந்தவர்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளரை 24000 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

இவருக்கு ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 


English Summary
Preet Gill UK's First Female Sikh MP Won From Edgbaston