நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
கொஞ்சம் டீப்பாக அலசினால் பல நேரங்களில் தமாஷாகவே இருக்கும்..
யாருக்கும் தெளிவாக பதில் புரிந்து விடக்கூடாது என்பதற்காக மெனக்கெட்டு ஒரே கேள்வியை வகைவகையாய் பிரிப்பார்கள்..
முதலமைச்சர் பழனிசாமி ஆட்சி பாஸா ஃபெயிலா என நேரடியாக கேட்டிருக்கலாம். சரி அதுதான் இல்லை என்றால் மக்கள் அளித்துள்ள மதிப்பெண்களையாவது கூட்டி இவர்களாவது நேரடியாக சொல்லியிருக்கலாம்..
இதற்கு இடையில் சொல்ல இயலாது என ஒரு கேட்டகிரி பிரித்து இருப்பார்கள்.. ஆட்சி நல்லதா கெட்டதா என்று திரைமறைவில்கூட சொல்ல தெரியாத தத்திகளாகவும் கோழைகளாகவுமா இருப்பார்கள்?
சொல்ல இயலாது கேட்டகிரியில் வரும் 13 சதவீதத்தை வைத்து நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இந்த புள்ளி விவரங்களை முதலமைச்சருக்கு சாதகமாகவும் பாதகமாகவும் மாற்றிக்கொள்ளலாம்..
அப்புறம் இன்னொரு விஷயம்.. சசிகலா அரசியல் ஆசையில் இருந்த போது இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டதால் அவரையும் கணிப்பில் சேர்க்க வேண்டியதாயிற்று என்று சொல்கிறார்கள..
தேர்தலை பொருத்தவரை வாக்குப்பதிவுக்கு முந்தைய காலகட்டம் வரை தினமும் நிலைமை மாறிக் கொண்டே இருக்கும்..
இது தெரிந்த ஒரே காரணத்தினால்தான் அரசியல் தலைவர்கள் 24 மணி நேர பீதியோடு தேர்தல் களத்தில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்கள்..
சரி போகட்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பாஸா பெயிலா? இந்த கருத்துக்கணிப்பில் நீங்களே கண்டுபிடித்து சொல்லுங்கள்?