சென்னை: ஆதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அரசின் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,  பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி, பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 9 & 10ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள்.

1முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரத்தொழில் புரிவோரின் பிள்ளைகளும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியடையவர்கள்.

இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆதார் எண் பெற்றிருக்க வேண்டும்.

ஆதார் எண்ணுடன் இணைந்த வங்கிக்கணக்குக்கே கல்வி உதவித்தொகை அனுப்பி வைக்கப்படும்,

தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டியது கட்டாயம்,

National Scholarship Portal-ல் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்திடல் அவசியம் போன்ற வழிமுறைகளும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வித்தொகை பெற மாணவர்களே நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக Nodal Officer-ஐ பள்ளிகள் நியமனம் செய்திடல் வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.