சென்னை

த்திவரதருக்கு மழை வரம் வேண்டி வாட்ஸ்அப் மூலம் பதியப்பட்ட கவிதை நேட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதர் தரிசன வைபவம் தற்போது காஞ்சிபுரத்தில் சிறப்பாக நடை பெற்று வருகிறது. தற்போது மாநிலம் எங்கும் மழை இன்றி குடிநீர் பஞ்சம் நிலவுவதால் நெட்டிசம் மழை வரம் வேண்டி கவிதை எழுதி உள்ளார். வாட்ஸ்அப் மூலம் பதியப்பட்ட கவிதை நெட்டிசன்களால் பரப்பப்பட்டு வைரலாகி உள்ளது.

 

நமது வாசகர்களுக்காக அந்த கவிதை இதோ :

 

அத்திவரதருக்கு அடியேனின் விண்ணப்பம் .

நாற்பது ஆண்டுகள் நீரிலேயே இருந்த பெருமாளே , நீரின்றி தவிக்குது தமிழ்நாடே! இந்த நாற்பது ஆண்டுகளில் நாநூறு ஏரிகளை களவாடிவிட்டார்களே கயவர்கள் அதை காண நிலம் வந்தாயோ !

பார் செழித்திருக்கும் என்று பார்க்க வந்தாயோ ! இந்த நாற்பது ஆண்டுகளில் நான்காயிரம் பார்கள் திராவிட கட்சிகளின் ஆட்சியில் இதையெல்லாம் பார்க்க கூடாது என்று நீருக்குள் சயனித்தாயோ !

இப்போது மேலே வந்த அத்திவரதபெருமாளே, ஏன் வான்பார்த்து சயனம் கொண்டாய்! வான்மழை தரவேண்டும்,வையகம் செழிக்க வேண்டும் என்று மக்களை காக்க வந்தாயா? காஞ்சி நகர்வாழ் அத்திவரத பெருமாளே கருணைக்கடலே , முப்பது நாட்கள் சயனித்து பிறகு பதினெட்டு நாட்கள் நின்ற கோலத்தில் அருள்புரியும் அத்திவரதபெருமாளே!

ஆறுகளை காணவில்லை, ஏரிகளை காணவில்லை, குளங்களையும் காணவில்லை, வாய்க்கால்களையும் காணவில்லை, மலைகளையும் காணவில்லை, உன்னுடைய குளம் மட்டுமே பாதுகாப்பாக உள்ளது ஏன் ? நீ இருப்பதாலோ என்னவோ பாதுகாப்பாக உள்ளதோ?

இறுதியில் இந்த அடியேனின் ஒரு தாழ்மையான வேண்டுகோள் இனியும் தண்ணீருக்குள் சயனம் உனக்கு தேவையா ? இங்கேயே இருந்து தமிழக மக்களை காப்பாற்ற அருள்புரிய வேண்டும் அத்திவரதபெருமாளே உனைக்காண முதல்நாளே ஆவல் கொண்டேன் .நீ எனை பார்க்கமாட்டாய் . காரணம் வான் பார்த்து சயனிப்பதால் என்று முப்பது நாட்கள் காத்திருக்கிறேன் .

நீ நின்ற கோலத்தில் எமக்கு அருள்புரிவாய் என்று காத்திருக்கிறேன் . இந்த முப்பது நாட்களில் நாட்டில் நல்ல மழை பெய்து நாடு செழிப்பதை நீ நின்ற கோலத்தில் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டுள்ளேன். இதை அவசர விண்ணப்பமாக ஏற்று விசாரித்து நாடு செழிக்க அருள்புரிவாய், அத்திவரதபெருமாளே!

இப்படிக்கு மழையின்றி தவித்திருக்கும் விவசாயிகள்