நெட்டிசன்:

வாட்ஸ்அப் தகவல்…

விஸ்வாசம் காட்ட வேண்டிய இடத்தில், சர்வநாசம் செய்யும் சகுனி பணியை மெச்சத்தகுந்த வகையில் (!) செய்துக்கொண்டிருக்கிறார், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் நிர்வாக இயக்குனர் சக்தி சரவணன்.

இந்த வங்கியின் தலைமை அலுவலகம் ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கோயிலின் இடமே வங்கிக்கு சொந்தமானதுதான். இந்தக் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கும் பணி கன ஜோராக நடந்து வருகிறது.

இதை செய்வது வேறு யாருமில்லை… சக்தி(பொருந்திய) சரவணனே. கூட்டுறவுத்துறை பணியில் நுழைந்து , இன்று மாநில கூட்டுறவு வேளாண்மை வளர்ச்சி வங்கியின் கைப்பிடியில் வைத்தி ருக்கும் சக்தி சரவணன் செய்துக்கொண்டிருக்கும் அட்டகாசங்களை பட்டியலே போடமுடியாது என்கிறார்கள், அவ்வங்கியின் தொழிற்சங்க நிர்வாகிகள்.

1. ஆஞ்சநேயர் கோயில் உண்டியலில் விழும் காசுகள் இன்று சில கோடிகளை தொட்டுவிட்டது. இதிலிருந்து எடுத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஒரு கமிட்டி போட்டிருக்கிறார் நில வள வங்கியின் நிர்வாக இயக்குனர் சக்தி சரவணன்.

இந்த கும்பாபிஷேக பணிகளை கூட்டுறவு ஒப்பந்தக்காரர்களுக்குத்தான் தரவேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இந்தப்பணிகளை வெளி ஒப்பந்தக்காரர்களை வைத்து செய்ய திட்டமும் உத்தரவுகளும் தயாரகிவிட்டது.

2. தலைமை அலுவலகத்தில் வங்கிக்கட்டடம் புதுப்பித்தல் என்ற பணியை 6.50 லட்சம் முதல் 7 லட்சம் வரைக்குள் தான் செய்ய ஒரு ஒப்பந்தக்காரர் மதிப்பீடு செய்து அறிக்கை கொடுத்தார். ஆனால், இன்று 15 லட்சம் ரூபாய் செலவு செய்து, 7 லட்சம் கபளீகரம் செய்துவிட்டார்.

3. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும், ஊழியர்களின் அரியர்ஸ் தொகையை கொடுக்க, ஒவ்வொரு ஊழியரிடமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் வாங்கி, 30 லட்சம் ரூபாயை அபேஸ் செய்துக்கொண்டார்.

4. அதே போல, மாநில நிலவள கூட்டுறவு வங்கிகளிலும் இதே கதைதான். அந்த ஊழியர்களின் அரியர்ஸ் தொகையை உடனே விடுவிக்கிறேன் என்று நபர் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்பணியை செய்துக்கொடுப்பது திருவள்ளூர் மாவட்டத்தில் நில வள வங்கிக்கிளையில் பணியாற்றும் ஒரு அல்லக்கை. இந்த அல்லக்கை வைத்து, எல்லா ஊழியர்களின் பதவி உயர்வையும் உடனே செய்து தருவதாகச் சொல்லி வசூல் வேட்டை நடக்கிறது.

-இத்தனை மோசடிகளையும் ஊழல்களையும் செய்துக்கொண்டு ஆடாத ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் சக்தி சரவணன், எப்படிப்பட்டவர் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம்.

இவர் டி.யு.சி.எஸ்.சில் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய போதுதான், அம்மா மருந்தகத்துக்கு எக்ஸ்பைரியான மருந்துக்களை வாங்கி, ஊழல் செய்து சஸ்பெண்ட் ஆனவர்.
இரண்டரை வருடம் சஸ்பெண்ட் ஆகி, பிடிக்க வேண்டியவர்களை பிடித்து 50 லட்சம் லஞ்சம் கொடுத்து கூட்டுறவு நில வள வங்கிப்பதவியை பிடித்துவிட்டார்.

நில வள வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி இருக்கிறது. அதில் ஏகப்பட்ட பணத்தை சுரண்டவும், ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துகிறேன் என்று 3 கோடியை சுருட்டவும் கச்சிதமாக பணியாற்றி வருகிறார்.

‘இது தொடர்பாக, கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. உள்ளாட்சித்தேர்தல் வரும் வேளையில், ஏழை பாழைகளான விவசாயிகளின் பணத்தை கொள்ளையடிக்கும் இவரை பணியில் நீட்டிக்க வைத்தால்…. ஆளும் கட்சியின் பரிதாப நிலைக்கு தள்ளப்படுவது சத்தியம். அதை கச்சிதமாக செய்யும் சகுணியை என்னச் செய்யப்போகிறார் செல்லூர் ராஜூ.