கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த திரையுலகிற்கு நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்படும் ‘நவரசா’ ஆந்தாலஜி தொகுப்பில், கெளதம் மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.

‘நவரசா’ ஆந்தாலஜி தொகுப்பில் மொத்தம் 9 குறும்படங்கள் இடம்பெறுகின்றன. கெளதம் மேனன், கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகியோர் தலா ஒரு படங்களை இயக்குகின்றனர்.

இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கும் சூர்யா படத்தில் நடிக்க பிரயகா மர்டின் இணைந்துள்ளார். மலையாள திரையுலகில் அறிமுகமான இவர், மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியும், வரவேற்பும் பெற்ற ‘பிசாசு’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]