புதுடெல்லி:

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், டாக்டர் புபன் ஹஜாரிகா ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.


இந்த ஆண்டுக்கான நாட்டின் உயரிய பாரத் ரத்னா விருது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கு பிந்தைய பாரத் ரத்னா விருது நானாஜி தேஷ்முக், டாக்டர் புபன் ஹஜாரிகா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நானாஜி தேஷ்முக் சமூக ஆர்வலராக இருந்தவர். கல்வி, மருத்துவம், மற்றும் கிராம சுய கூட்டுறவு ஆகிய தளங்களில் பெரும் பங்காற்றியவர். இவருக்கு ஏற்கெனவே பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனசங்க தலைவராகவும், ராஜ்யசபை உறுப்பினராகவும் இருந்தவர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த புபன் ஹஜாரிகா பிரபல பாடகர். கவிஞர், இசையமைப்பாளர், படத் தயாரிப்பாளர் ஆகிய தளங்களில் பணியாற்றியவர்.

பத்மஸ்ரீ விருது பெறுவோர் பட்டியல்:

தமிழகத்தை சேர்ந்த இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, நடிகர் பிரபுதேவா,பாடகர் சங்கர் மகாதேவன், மலையாள நடிகர் மோகன்லால்,
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், மருத்துவர் ராமசாமி வெங்கடசுவாமி, சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்.