குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்

Must read

aa
காமக்கொடூரன் பார்த்தா மண்டல் என்பவனிடமிருந்து தமக்கு மிகவும் ஆபாசமான பதிவுகள் மூலம் தொல்லைக்கு      ஆளாகியதாக,  குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜியின் மகளும் பிரபல அரசியலாளருமான திருமதி ஷர்மிஷ்தா முகர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்  தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,  தமக்கு பார்த்தா மண்டல் எனும் காமக்கொடூரன் தொடர்ந்து மிகவும் ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், அதை முதலில் புறக்கணித்து அவன் மேலும் தொடர்பு கொள்ளாதவாறு அறவே முடக்கிவிடலாம் என்று எண்ணியதாகவும், பிறகு இவனை அப்படியே விட்டால் வேறு யாராவது அடுத்த பெண்களையும் இதுபோலவே துன்புறுத்தக்கூடும் என்பதால் ஃபேஸ்புக் அலுவலகத்திற்கு அவனைப் பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
b
அதன்படி அவர் அனுப்பிய புகாரை ஏற்ற ஃபேஸ்புக் நிறுவனம் அவனின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கியுள்ளது.
பார்த்தா மண்டல் மேற்குவங்கத்திலுள்ள நைஹாத்தி என்ற ஊரைச்சார்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article