கடந்த சில மாதங்களாக, நடிகர்கள் அரசியல் குறித்து ட்விட் பதிவதும், தேர்தலில் நிற்கப்போவதாக அறிவிப்பதும் வழக்கமாகி வருகிறது.
இந்த வரிசையில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜம் சேர்ந்திருக்கிறார். மத்திய அரசை எதிர்த்து கடுமையான ட்விட்டுகளை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே, கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், “கர்நாடகத்தை கன்னடர்கள்தான் ஆளவேண்டும்” என்று பேசியதாக தகவல் பரவியது. இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
இந்த நிலையில், அவ்வாறு தான்பே சவில்லை என்று பிரகாஷ்ராஜ் மறுத்தார்.
இதற்கிடையே,பெங்களூர் பிரஸ் கிளப் சார்பில் பிரகாஷ்ராஜூக்கு சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அவருக்கு ரசிகர்கள் பலம் இருக்கிறது. நாளடைவில் இது தொண்டர்கள் பலமாக மாறும். ரஜினி அரசியலுக்கு வருவதை அவரது ரசிர்கள் மகிழ்ச்சியாக வரவேற்பதை போலவே சக நடிகனாக நானும் வரவேற்கிறேன்” என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.