தனுஷை தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் பிரகாஷ்ராஜ்….!

Must read

நடிகர் பிரகாஷ் ராஜ் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார்.

ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் பிரகாஷ் ராஜ், மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சுந்தர சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர் இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தமிழ் திரையுலகை சேர்ந்த தனுஷ், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

 

More articles

Latest article