நிலவில் பிரக்யான் ரோவர் மேற்கொண்டு வந்த ஆய்வுப் பணி நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு உள்ள போதிலும் அது உறக்க நிலையில் உள்ளது.

LIBS கருவி மூலம் மேற்கொண்ட ஆய்வு விவரங்களை விக்ரம் லேண்டர் வழியாக பூமிக்கு அனுப்பிய பிரக்யான் ரோவரின் செயல்பாடுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கு ஓய்வு அளிக்கும் விதமாக அதன் செயல்பாடுகளை இஸ்ரோ நிறுத்தி வைத்துள்ளது.

நிலவில் அடுத்த சூரிய உதயம் செப்டம்பர் 22 ம் தேதி நிகழ இருப்பதை அடுத்து சூரிய வெளிச்சம் படும்படியாக சோலார் பேனல்கள் திருப்பி வைக்கப்பட்டுள்ளது.

அப்போது ரோவர் தனது ஓய்வில் இருந்து மீண்டும் பணியை தொடங்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அந்த முயற்சி பலனளிக்காமல் போனால் நிலவுக்கான இந்திய தூதராக பிரக்யான் ரோவர் அங்கேயே இருக்கும் என்று அறிவித்துள்ளது.