இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த உலகின் முதல் நிலை செஸ் வீரரான மஃக்னஸ் கார்ல்சன் இடையிலான FIDE உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று துவங்கியது.
9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது இதில் யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிந்ததை அடுத்து இருவருக்கும் தலா அரை பாயிண்டுகள் வழங்கப்பட்டது. இதன் அடுத்த சுற்று நாளை நடைபெற உள்ளது.
முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ குருவனா-வை இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.
சில கணங்களுக்கு முன்பு பிரக்ஞானந்தா உலக சதுரங்கப்போட்டியில் 3வது இடத்தில் இருந்தவரை வீழ்த்தி அரை இறுதிப் போட்டியிலும் வென்று விட்டார். உலகின் முதலாவது இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனுடன் நடக்கும் இறுதிப் போட்டி நாளை துவங்குகிறது.
பாராட்டுகளும் வாழ்த்துகளும் செல்லமே! 🥰👍👏🏽 pic.twitter.com/eMGfIYBDiz
— 🚶🏽பயணி தரன் (@PayaniDharan) August 21, 2023
அஜர்பெய்ஜான் நாட்டில் உள்ள பைக்கு நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் நேற்றைய அரையிறுதிப் போட்டியை அந்நாட்டிற்கான இந்திய தூதரும் தமிழருமான ஸ்ரீதரன் மதுசூதனன் காய் நகர்த்தி தொடங்கி வைத்தார்.