சென்னை

பிரக்ஞானந்தா செஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

பாகுவில் நேற்று முடிந்த ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 2வது இடம் பெற்றார். இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சனுடன் மோதிய பிரக்ஞானந்தா வெற்றிக்காகக் கடுமையாகப் போராடினார்.

கார்ல்செனின் கைகள் இறுதியில் ஓங்கியதால், பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பெற்றார். சர்வதேசம் செஸ் தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். தற்போது அவர் 29வது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஏற்கனவே இந்த பட்டியலில் தமிழ்நாடு வீரர் குகேஷ் 8வது இடத்திலும், விஸ்வநாதன் ஆனந்த் 9வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]