பிரபாகரன் என்னும் ஆண் மகன்!:  டி.வி.எஸ். சோமு

Must read

பிரபாகரன்
பிரபாகரன்

ன்று ஆண்கள் தினமாம்.  இந்த தினத்தில் எனக்கு “ஆகச் சிறந்த ஆண்மகன்கள்” சிலரது பெயர் மனதிற்குள் ஓடுகிறது. அவர்களில் பிரபாகரன் பற்றி எழுத விரும்புகிறேன்.
அவரை நான், “ஆகச்சிறந்த ஆண்மகன்” என்பதற்குக் காரணம், அவரது போராட்டகரமான வாழ்க்கைக்காக அல்ல.
அவரது போராட்டம் சரியா, போராட்ட முறை சரியா என்பது குறித்தெல்லாம் ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்கள் உள்ளன.  நான் அதற்குள் போக விரும்பவில்லை.
பெண்களை அவர் எப்படி நோக்கினார், நடத்தினார் என்பதே, அவரை பேராண்மை மிக்க ஆண்மகனாக எனக்கு அடையாளம் காட்டுகிறது.
சிங்கள ராணுவம், காவல்துறை என்று அரச அங்கங்க அங்கங்களே, தமிழ்ப் பெண்டிர் பலரை சித்திரவதைக்குள்ளாக்கியது, பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியது. அரச பயங்கரவாதம். இது உலகறிந்த உண்மை.
ஆனால், விடுதலைப்புலிகள், சிங்கப் பெண்கள் மீது அப்படியான வன்முறை எதையும் ஏவியதே இல்லை. வாய்ப்புகள் இருந்தும்.  காரணம், புலிகளை அப்படி ஒழுக்கமிக்கவர்களாக வளர்த்தெடுத்தார் பிரபாகரன்.
சிங்களர்கள், ஆகப்பெரும் எதிரியாகக் கருதியது பிரபாகரனைத்தான். ஆனால் சிங்கள ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற தளபதி கமால் குணரத்தின ”பிரபாகரன் தம்மையும் தம்மைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தை கடைபிடித்தவராக இருந்தார்” என்றது நினைவுக்கு வருகிறது.
.பிரபாகரனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஈழப் பகுதியில்  தேசத்துரோகத்துக்கு நிகரான குற்றங்களாகக் கருதப்பட்டவை… சாதீய பாகுபாடும், பெண்களுக்கு எதிரான அடக்குமுறையும்தான்!
ஆனால் இங்கே தமிழகத்தில் என்ன நிலை?
பிரபாகரனை புகழ் பாடுவோருக்கே, அவர் பெண்களை எந்த அளவுக்கு மதித்தார் என்பதை உணரவில்லை.
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கும்.
விஜயதரணி
விஜயதரணி

விடுதலைப் புலிகளைப் பற்றி, விஜயதரணி எம்.எல்.ஏ. தரக்குறைவாக பேசினார் என்று அவரை பாலியல் ரீதியாக கொச்சையாக விமர்சித்தனர் பலர். அதுவும் சமூக வலைதளங்களில் செயல்படும் பிரபாகரன் ஆதரவாளர்கள் மிகக் கேவலமான சொல்லாடல்களைப் பயன்படுத்தினர்.
இது எத்தனை கேவலமான ஆணாதிக்கம்?
ஒருவரது கருத்து உடன்பாடில்லை என்றால், உடனை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்துவதா?
பெண் என்றால் அவரையும், ஆண் என்றால் அவரது தாயயையும் கொச்சைப்படுத்துகிறார்கள்.  ஆக, எதிர்க்கருத்து உடையோர் ஆணோ பெண்ணோ.. கொச்சைப்படுத்தப்படுவது பெண்தான்!
பிரபாகரனைப்போல, பெண்களுக்கு ஆயுதம் கொடுத்து போரிடச் சொல்ல வேண்டாம். குறைந்தபட்சம், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எத்தனை ஆண்கள், தன் வீட்டுப் பெண்டிரை அனுமதிக்கிறார்கள்?
அடுத்த வீட்டுப் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் கொடுத்து அடக்க நினைப்பது போல, தன் வீட்டுப் பெண்களுக்கு “அச்சம் மடம்நாணம் பயிர்ப்பு” என்று வேலி போட்டு  அடைக்கிறார்கள்.
இங்கே ஆகப்பெரும்பாலோர் இப்படித்தான். ஏன், “தலைவர்கள்” என்று நாம் கொண்டாடுபவர்கள் பலரது பேச்சு.. ஏச்சு.. நாம் அறியாயததல்ல.
போகட்டும்… இன்று ஆண்கள் தினமாம். இனியேனும், பெண்களை மதிக்கும் பேராண்மை உள்ள ஆணாக இருப்போம்!
குறைந்தபட்சம், பெண்களை, மரியாதைக்குரிய சக உயிராக மதிப்போம்.
பெண்டிரை கொச்சைப்படுத்தும் விபசாரி, பத்தினி, அவுசாரி, போன்ற  “அருவெறுபபான” வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்துவோம்.
அப்படிப்பட்ட ஆண்கள்தான், பேராண்மை கொண்ட ஆண்கள். அவர்களுக்கு ஆண்கள் தின வாழ்த்துகள்!

More articles

2 COMMENTS

Latest article