“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைகோ மேலும் தெரிவித்ததாவது:
” பிரபாகரன் சீமான் சந்திப்பு நடந்தது மிகச்சில நிமிடங்கள்தான். விடுதலைப்புலிகள் உடையை அணிந்து பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சீமான் விரும்பினார். அதற்கு புலிகள் அனுமதிக்கவில்லை. புகைப்படம் கூட எடுக்க அனுமதிக்கவில்லை.
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படம் மார்பிங் செய்யப்பட்ட போலி புகைப்படமாகும்.
சீமான் தான் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி கோடிக்கணக்கில் வெளிநாட்டு தமிழர்களிடம் பணம் பெறுகிறார்” என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.