பாது, மலேசியா

லேசியாவின் பாது தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 22 வயது பிரபாகரன் மலேசியாவின் மிக இளைய பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

புகைப்பட உதவி : மலேசியா ராஜா

மலேசியா பாராளுமன்ற பொதுத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.   அதில் பாது தொகுதியில் நான்கு பேர் போட்டியிட்டனர்.   இதில் 22 வயதான சட்ட மாணவர் பிரபாகரன் சுயேச்சையாக போட்டியிட்டார்.  இவரை எதிர்த்து கட்சி சார்பில் இருவரும் சுயேச்சையாக ஒருவரும் போட்டியிட்டனர்.

 

இந்த தேர்தலில் பிரபாகரன் வெற்றி பெற்று மலேசியாவின் மிக இளைய பாராளுமன்ற உறுப்பினர் என்னும் தகுதியை பெற்றுள்ளார்.  தற்போது இவருடைய வயது 22 வருடங்கள், 3 மாதம் ஆகும்.     இவர் 24,438 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு பாரிசன் நேஷனல் கட்சியை சேர்ந்த தாதுக் சென் நஜிப் ரசாக் மலேசியாவில் மிகக் குறைந்த வயதில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தார்.  கடந்த 1976ஆம் வருடம் இவர் தனது 23 வயது 5 மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த சாதனையை தற்போது பிரபாகரன் முறியடித்துள்ளார்.