தெஹரான்

ரான் நாட்டின் மூத்த தலைவர் அலி கமேனி ஐரோப்பிய நாடுகள் வர்த்தக உத்திரவாதம் அளிக்கவில்லை எனில் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என மிரட்டி உள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் அணு ஆயுத சோதனைகளுக்கும் ஆயுத பயன்பாட்டுக்கும் சர்வதேச அளவில் கட்டுபாடுகள் விதிக்கப்படன.   அதன் பிறகு அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தாகியது.   ஈரான் நாடு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டது.   அதையொட்டி அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் ஈரான் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்களை நீக்கிக் கொள்ளப்பட்ட்து.

இந்த ஒப்பந்தத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.   அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்காக ஈரானுக்கு தாம் பதவி ஏற்றதில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்,    நேற்று அவர் ஈரானுடன் செய்துக் கொண்ட சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இது குறித்து ஈரான் நாட்டின் மூத்த தலைவரான அலி கமேனி, “ஈரானுடன் செய்துக் கொண்ட சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.   ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுத ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகள் எங்களுடனான வர்த்தக உறவை தொடர்வோம் என  உத்திரவாதம் அளிக்க வேண்டும்.   அவ்வாறு அளித்தால் நாங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை தொடர்வோம்.   உத்திரவாதம் அளிக்காவிட்டால் சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வோம்” என கூறி உள்ளார்.