நடிகை கஸ்தூரி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு இனத்தவர் குறித்தும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் நடிகை கஸ்தூரிக்கு பிணைப்பத்திரம் கொடுப்பதில் தாமதமானதால் அவர் இன்னும் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து தனது வழக்கறிஞர் கார்த்திக் ராஜாக்கு எழுதிய கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில் கடிதத்தில் வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் நீதிமன்றத்திலும் பொது இடங்களிலும் பொய்யாகவும் தவறாகவும் என்னால் முன்னிறுத்தப்பட்டதாக கூறி வருகின்றார்.

அது முற்றிலும் பொய்யான தகவல் எனது வழக்கறிஞர் என்கிற முறையில் நான் நியமனம் செய்தது கார்த்திக் ராஜா என்பவரை மட்டும் தான்.

எனவே பிரபாகரன் நான் நியமிக்கப்பட்டதாக கூறி வருவதை தடுத்து நிறுத்து வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர் பிரபாகரன் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக இருந்தவர் என்பதும் நடிகை கஸ்தூரிக்கு நான் தான் வழக்கறிஞர் என கூறி வழக்கறிஞர் பிரபாகரன் இரண்டு முறை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.