மதுரை:
பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பெற்று கார் பரிசை தட்டிச் சென்றார்.
மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாடிவாசல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். இப்போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை அடக்கி தொடர்ந்து 3வது ஆண்டாக முதல் பரிசை பொதும்பு பிரபாகரன் தட்டிச்சென்றார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 729 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.