தற்போது வரை கொரோனாவால் இந்தியாவில் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 41 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு குறையும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்டையே, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்கள் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. நேற்றுவரை, கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக இருந்தது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்
இதனிடையே, ‘பிரபாஸ் 20’ படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்குச் சென்று வந்தது படக்குழு. ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து இந்தியா திரும்பிவிட்டு, பிரபாஸ் யாரையும் சந்திக்கவில்லை.
“வெளிநாட்டுப் படப்பிடிப்பைப் பத்திரமாக முடித்துத் திரும்பியுள்ள நிலையில், கோவிட்-19 பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு நானே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். நீங்கள் அனைவரும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.