வெளியானது சர்ச்சை இயக்குனரின் 'பவர் ஸ்டார்' டிரைலர்….!

Must read


சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா, தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான பவன் கல்யாணைக் கிண்டலடிக்கும் விதத்தில் எடுத்துள்ள படம் ‘பவர் ஸ்டார்’.
இப்படத்தின் டிரைலரை அவருடைய சொந்த இணையதளத்தில் இன்று வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார். அதுமட்டும் இன்றி, அந்த டிரைலரைப் பார்க்க ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய திட்டத்தையும் வெளியிட்டிருந்தார்.
ஆனால், அந்த டிரைலர் இணையதளங்களில் லீக் ஆனதால், சற்று முன் டிரைலரை youtube இலவசமாகவே வெளியிட்டுள்ளார்.இன்று வெளியாகி உள்ள டிரைலர் 4 நிமிடங்கள் உள்ளது.

ஜுலை 25 ஆம் தேதி இப்படத்தை அவருடைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப் போகிறாராம். அதற்கு முன்னதாக முன்பதிவு செய்தால் படத்தைப் பார்க்க 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமாம். ஜுலை 25 ஆம் தேதி காலை 11 மணிக்குப் பிறகு முன்பதிவு செய்தால் 250 ரூபாய் கட்டணமாம்.

More articles

Latest article