தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….கட்டடங்கள் தரைமட்டம்

Must read

தைபெய்:

தைவானில சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளின் இருந்து வெளியே ஓடிவந்தனர்.

ரிக்டர் அளவுகோளில் இது 6.4 ஆக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தில் ஹூவாலின் நகரில் ஒரு ஓட்டல் உள்பட சில கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ராணுவமும், பேரிடர் மேலாண்மை குழுவினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உயிர் பலி குறித்தும், சேத விபரங்களும் உடனடியாக வெளியாகவில்லை.

More articles

Latest article