பப்புவா நியூ கினியா நாட்டில், அங்குள்ள நேரப்படி  மாலை 6.28 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. கடலுக்குள் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

பப்புவா நியூ கினியா தீவின் கோகோபோ என்ற நகரின் வடகிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்குள் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளதை தொடர்ந்து,  1000 கிலோ மீட்டர் சுற்றளவில் சுனாமி பேரலைகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டுக்கு அருகில் உள்ள சாலமன் தீவு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]