டில்லி

ச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லாகுர் ஃபிஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபட்டுள்ளார்.

பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஃபிஜி குடியரசு ஆகும். இந்த தீவு நாடு சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை சீற்றத்தினால் உருவானது ஆகும். இங்கு கிமு 2ஆம் நூற்றாண்டில் இருந்து மனிதர்கள் வசித்து வருகின்றானர். இந்த நாடு பிரிட்டனிடம் இருந்து கடந்த 1976 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது.

உச்சநீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதிகளில் மதன் லாகுர் ஒருவர் ஆவார். இவர் முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக குரல் கொடுத்த 4 நீதிபதிகளில் ஒருவர் ஆவார். இவர் உச்சநீதிமன்ற நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

தற்போது மதன் லாகுர் ஃபிஜி குடியரசின் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஃபிஜி குடியரசு உச்சநீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் குழு ஒன்று உள்ளது. இதில் மதன் லாகுர் இடம் பெற உள்ளார். இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.