சென்னை:
தமிழகத்தை மின்மிகை மாநிலமாக கூறிக்கொள்ளும், தமிழக அரசு, மின் கட்டணத்தை 30 சதவிகிதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் பரவிய நிலையில், தமிழக மின்வாரியம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பரவலாக மின்வெட்டு இருந்த நிலையில், அணுமின் நிலையிம், நீர் மின்நிலையம், அனல்மின் நிலையம், காற்றாலை மின்சாரம், சோனார் பேனல் மின்சாரம் போன்ற நடவடிக்கைகள் காரணமாக மின்வெட்டு அடியோடு ஒழிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
ஆனால், தற்போது கோடை வெயியில் கொளுத்தும் நிலையில் பல பகுதிகளில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அல்லல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது மின் கட்டணத்தை உயர்த்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.) மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறியதாவது,
தமிழகத்தில்30 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் அரசு ஒப்புதல் பெற்று விட்டதாகவும், மின்வாரியத் தில் ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுபட்ட கட்டண உயர்வு செய்ய இருப்பதாக தமிழக மின்வாரியம் கூறுகிறது என்றார்.
தமிழக மின்வாரியம 2019-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ரூ.7,760 கோடி நஷ்டத்தில் மின்வாரியம் இயங்குவ தாக கூறுகின்றனர்.
தமிழக மின் தேவை 16,300 மெகாவாட். ஆனால், மொத்த தேவையில் 3-ல் ஒரு பங்கை வெளிச்சந்தையில் அநியாய விலைக்கு வாங்கினால் ஏன் நஷ்டம் வராது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், 1000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை யூனிட் ரூ.3.39 க்கு வாங்குகிறோம். இந்த பணத்தை உடனே வாங்காமல் பேங்கிங் சிஸ்டம்’ முறையில் தாமதமாக 5 ரூபாய் 60 காசு வழங்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.800 கோடி நஷ்டம் வருகிறது. எண்ணூரில் 660 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் கட்ட 2014-ல் ரூ.4 ஆயிரம் கோடிக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. டெண்டர் எடுத்தவர் இந்த விலையில் தற்போது கட்ட முடியாது என்று சொல்லி விட்டார்.
2019-ல் மீண்டும் ஒரு கம்பெனிக்கு ரூ.7 ஆயிரத்து 100 கோடிக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி செய்தால் ஏன் நஷ்டம் வராது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆனால், தமிழகத்தில் மின்கட்டணம் 30% வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகும் தகவல் தவறானது என்று மின்வாரியம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
தமிழகத்தின் மின்கட்டணம் உயர்ந்தால், தற்போதே விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி போன்ற கடும் நெருக்கதலுக்கு ஆளாகி உள்ள பொதுமக்கள் மேலும் அவதிப்படுவார்கள்… இதன் காரணமாக எடப்பாடி அரசுக்குத்தான் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகும் என்பதில் ஐயமில்லை.