
ஃபேஸ் டூ ஃபேஸ் நிறுவனம் சார்பாக அறிமுக இயக்குநர் அப்பு.கே. சாமி இயக்கத்தில் திரைக்கு வர தயாராகயிருக்கும் திரைப்படம் ‘பாண்டியும் சகாக்களும்’ இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏ.வி.எம்.இல் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அதியமான், மனோஜ்குமார், நடிகர் பவர்ஸ்டார், ஆச்சி மசாலா நிறுவனர் ஐசக், பீ.ஆர்.ஓ. யூனியன் செயலாளர் ஜான் ஆகியோர் இசை தட்டை வெளியிட்டனர்.
இந்த விழாவில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது :-
“என்னைப் பற்றியும் நிறைய வதந்திகள்… ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சினிமாவில் முன்னேறிக்கொண்டே இருப்பேன்… கலைத் தாய் என்னை தத்தெடுத்துக் கொண்டிருக்கிறாள்… சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாட என்னை அழைத்தார்கள்.. ‘அப்படி ஆடுவதற்கு நான் என்ன சில்க்கா..?’ என்று அவர்களிடம் திருப்பிக் கேட்டேன்… ஆனாலும், ‘நான் ஆடினால் படம் ஓடும்’ என்று நம்பி வருகிறார்கள். அவர்கள் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை. ‘ஆடுகிறேன்’ என்று சொல்லிவிட்டேன்…” என்றார்.
சார் நிஜமாத்தா சொல்லுரிங்களா?
Patrikai.com official YouTube Channel