சென்னை : பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை மாகரின் முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனவும் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மின்வாரியம் வெளியிட்டுள்ள தகவலில்,  நாளை முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது எனவும் எனவே பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

தரமணி – பெருங்குடி பகுதி: ராமப்பா நகர், சர்ச் மெயின் ரோடு, அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம் – கடப்பேரி பகுதி: துர்கா நகர் ஹவுசிங் போர்டு, ஏரிக்கரை தெரு, காமாட்சி நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி – ரெட்ஹில்ஸ் பகுதி: விவேகக்பர் அவென்யூ, ஜோதிநகர், மகாலட்சுமி நகர், வடிவேல் நகர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

சோத்துப்பெரும்பேடு பகுதி: அலிமேடு, பல்லசுரப்பேடு, மேட்டுசுரப்பேடு, மேட்டுக்காலனி மற்றும் வத்திகரன்பாளையம்.

கொளத்தூர் பகுதி: ராஜூஸ் அபார்ட்மெண்ட், சாந்தி காலனி, செந்தில் அவென்யூ, காந்திமதி தெரு, சீனிவாசன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மேலே கூறப்பட்டுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மதியம் 2 மணிக்குள்ளாக பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும் என மின்சார வாரியம் கூறியுள்ளது.

சுமார் 5 மணி நேரம் மின் விநியோகம் இருக்காது என்பதால் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.