சென்னை:

பதவி சண்டைக்கு பெயர் தான் தர்மயுத்தமாம் என அதிமுக அணிகள் இணைப்பு குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ பதவி சண்டைக்கு பெயர்தான் தர்மயுத்தமாம். இந்நாள், முன்ளாள் முதல்வர்கள் மிகச்சிறந்த நடிகர்கள். ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மமும் விலகவில்லை.

மர்மங்கள் வெளிப்பட வேண்டும் என தர்மயுத்தம் நடத்தியவர்கள், அதற்கு முன்னரே ஒருதாய் மக்கள் ஆகிவிட்டார்கள். சசிகலா குடும்பத்தாரின் நீக்கம் அதிகாரப்பூர்வமாக இல்லை.

டில்லியின் கயிற்றில் தொங்கும் பொம்மைகள். பாஜகவின் ஆளுமை எந்தளவிற்கு ஆழமாக இருக்கிறது என்பதை ஆளுநரின் அவசரம் காட்டியுள்ளது. ஜெ., மரணத்தில் உள்ள சந்தேகங்களை மறைக்க பா.ஜ. அரசும் உடந்தையாக இருக்கிறதா?

பெரும்பான்மையை இழந்த இந்த ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும் என்ற தமிழகத்தின் எதிர்பார்ப்பு, விரைவில் நிறைவேறும்’’என்று தெரிவித்துள்ளார்.