இஸ்லாமாபாத்:
மின்தட்டுபாடு எதிரொலியாக பாகிஸ்தானில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் ஏற்கனவே, சனிக்கிழமை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் திருமண கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் திருமண விருந்தில் ஒரே ஒரு உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாலும், அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாலும் வாகன ஓட்டிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எரிபொருட்களை இறக்குமதி செய்ய போதுமான அளவு பணம் இல்லை என வெளிப்படையாக அறிவித்துள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.