சென்னை: இன்று பவுர்ணமி தினம். இதையொட்டி, உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
திமுகவின் முப்பெரும் விழா நேற்று (செப்டம்பர் 17) கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், மு.க.ஸ்டாலின் விருதுபெற்ற முன்னாள் எம்.பி. பழனி மாணிக்கம், அமைச்சர் உதயநிதியை துணைமுதலமைச்சராக உடனே அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக துணைமுதலமைச்சர் கோஷங்கள் வலும்பெற்று வரும் நிலையில், முப்பெரும் விழா நிகழ்ச்சியிலும் பலர், உதயநிதியை வாழ்த்தி பேசினர். இதனால், அவர் துணைமுதல்வராக அறிவிக்கபட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகளின்ட முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திருச்சி சிவா உள்பட மூத்த கட்சி நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.