சென்னை:

டந்த சில நாட்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டம் நடத்தி வந்த மருத்துவர்கள், போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தமிழக மருத்துவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. ஆனால், மற்றொரு தரப்பினர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மருத்துவர்களின் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 25-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் வேலை நிறுத்த போராட்டத்தில், மாநிலம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றனர். இன்று 6வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

இதனால், பல்வேறு மாவட்டங்களில் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசி, ஆதரவு தருவதாக உசுப்பேத்திவிட்டு வந்தார்.

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல மருத்துவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மேலும் 2 மருத்துவர்கள்  உடல்நலம் பாதிக்கப்பட்டு‌ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவர்களின் போராட்டம் காரணமாக புறநோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் மருத்துவர்களின் போராட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் தமிழ்நாடு ‌மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்‌தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வேலை நிறுத்த போராட்டத்தை தள்ளி வைப்பதாக மாநில செயலாளர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

2 வாரங்களில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதனால் போராட்டத்தை தள்ளிவைக்கிறோம். என்றும், அரசை நாங்கள் நம்புகிறோம்.மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால்,, ஜனநாயக முறைப்படிதான் போராட்டம் நடத்தினோம் என்றும் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.